தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....


தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....
எல்லா மனிதர்களும் தங்கள் வீட்டை விட்டு வேலை நிமித்தம் தொழிற்சாலை,அலுவலகம்,வியாபாரம் என்று வெளியில் செல்லும்போது ஏற்படும் ஒரே சிந்தனை தனவரவு பெற வேண்டும் என்பதும்: போகும் காரியங்களில் வெற்றியை அடைய வேண்டும் என்பதும்தான் பிள்ளைக்கு உயர்கல்விக்கு இடம் கிடைக்க வேண்டும். பையனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும்,எதிரிகளால் ஏற்பட்ட வழக்குகளில் வெற்றிகிட்ட வேண்டும். அரசாங்கத்தில் பெற வேண்டிய காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும், கோபமாகச் சென்ற மருமகள் பிரச்சினை இல்லாமல் வீட்டிற்கு வரவேண்டும். மருத்துவ சிகிச்சையில் வெற்றி கிடைக்க வேண்டும் போன்ற பற்பல காரியங்களிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பவை அனைவரது சிந்தனையிலும் உள்ள அன்றாட பிரச்சினைகள். இதுமாதிரியான காரியங்களில் வெற்றியடையவும் தனவரவு பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் துணை நிற்கும்.
பரிகாரம்:
காரிய வெற்றிக்காகவும் தன வரவுக்காகவும் மேற்கொள்ளும் பயணத்தின்போது கறுப்பு நிற உடை அணிந்து செல்லக்கூடாது. தனது சட்ட்டைப் பையில் அல்லது பேக்கில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தாளில் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லுங்கள். அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். காரியம் தடையின்றி நடக்கும். மஞ்சள் தூளை எடுத்துச் செல்ல முடியாதவர்கள் ஒரு மஞ்சள் துண்டை எடுத்துச் செல்லலாம். காரியம் மங்களமாக முடியும். வர வேண்டிய தனவரவும் வரும்.
பரிகாரம் – 2
பயணத்தின் போது தங்களது குலதெய்வத்தை மனதில் வேண்டுவதோடு ‘ஓம் நமசிவாய நமக’ என்று மனதுக்குள் தொடர்ந்து 108 முறை சொல்லிச் செல்ல வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டே சென்றால் நீங்கள் தேடிச் சென்ற தனவரவு கிடைக்கும். சென்ற 
 காரியத்திலும் வெற்றி கிட்டும். (இது அனுபவத்தில் கண்ட உண்மை.
ஸ்ரீ அகத்தியர் மந்திலாயம் போன்: 7598758991,9952230991

Comments

Popular posts from this blog

மன அமைதி தரும் வினாயகர் மந்திரம்:

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு

சர்வ வசியம்: