குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!
குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!
குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையென்ற வருத்தம் பெற்றோர் பலருக்கும் இருக்கும். தன் குழந்தை நன்றாக படிக்கவில்லையே என்று பலரிடமும் புலம்பி தீர்ப்பார்கள் குழப்பத்தில் தவிப்பார்கள். சில குழந்தைகளுக்கு படித்தது நினைவில் இருந்தாலும் பரீட்சையில் மறந்து விடும். பாடங்களை உணர்ந்து படித்தாலும் மனதில் ஏறாது. சிலருக்கு ஜாதக தோஷ குறைப்பாட்டினால் இவ்வாறு இருக்கலாம்.பரீட்சைக்கு சென்றவுடன் மறந்துவிடும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. படித்தது நினைவில் இல்லாமல் கவலைப்படும் குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் உள்ளது.
இப்படிப்பட்டவர்கள் மாலை நேரத்தில் படிக்கும்போது வீட்டு பூஜையறையில் விளக்கில் சிறிது தேங்காய் எண்ணெய் மட்டும் விட்டு விளக்கேற்றி சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு கல்விக்கடவுளான சரஸ்வதியையோ, ஹயக்ரீவரையோ வணங்கி ஒரிரு மணி நேரம் விளக்கை எரிய வைத்துவிட்டு படித்தால் குழந்தைகளின் படிப்பு சிறக்கும். படித்தவை மனதில் தங்கும் பரீட்சையில் வெற்றி கிடைக்கும். விளக்கில் இருந்து வரும் நல்ல அதிர்வலைகள் நம் மூளையை சுறுசுறுப்பாக்கி இருக்கும் இடத்தையும் சுபிட்சமாக வைத்து நாம் படிப்பதை மனதில் எளிதாக பதியவைத்து படிக்கும் விஷயத்தை எளிதாக்குவது இதன் தத்துவம்.
Comments
Post a Comment