தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....

தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற..... எல்லா மனிதர்களும் தங்கள் வீட்டை விட்டு வேலை நிமித்தம் தொழிற்சாலை,அலுவலகம்,வியாபாரம் என்று வெளியில் செல்லும்போது ஏற்படும் ஒரே சிந்தனை தனவரவு பெற வேண்டும் என்பதும்: போகும் காரியங்களில் வெற்றியை அடைய வேண்டும் என்பதும்தான் பிள்ளைக்கு உயர்கல்விக்கு இடம் கிடைக்க வேண்டும். பையனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும்,எதிரிகளால் ஏற்பட்ட வழக்குகளில் வெற்றிகிட்ட வேண்டும். அரசாங்கத்தில் பெற வேண்டிய காரியங்களில ் வெற்றி கிடைக்க வேண்டும், கோபமாகச் சென்ற மருமகள் பிரச்சினை இல்லாமல் வீட்டிற்கு வரவேண்டும். மருத்துவ சிகிச்சையில் வெற்றி கிடைக்க வேண்டும் போன்ற பற்பல காரியங்களிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பவை அனைவரது சிந்தனையிலும் உள்ள அன்றாட பிரச்சினைகள். இதுமாதிரியான காரியங்களில் வெற்றியடையவும் தனவரவு பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் துணை நிற்கும். பரிகாரம் : காரிய வெற்றிக்காகவும் தன வரவுக்காகவும் மேற்கொள்ளும் பயணத்தின்போது கறுப்பு நிற உடை அணிந்து செல்லக்கூடாது. தனது சட்ட்டைப் பையில் அல்லது பேக்கில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தாளில் பொட்டலம் கட்டி எடுத்துச...