வருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள் இந்நாளில் குளிக்கும் நீரில் சிறிது பால் விட்டு குளித்து வர அதிர்ஷ்டம் சேரும். கொட்டை பாக்கினை சிகப்பு நூலால் சுற்றி லக்ஷ்மி தேவியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கவும். மறு நாளிற்கு மறு நாள் அதை கழற்றி வீட்டின் பண அறையில் வைத்து இருக்கவும்-மறு வருடம் தீபாவளி நாள் அதை ஓடும் நீரில் விட்டு புதிதாக அணிவிக்கவும். முதல் நாளே புதிய தென்னந்துடப்பம் வாங்கி வைத்து வீட்டை தீபாவளி நாள் முதல் அந்த துடைப்பத்தில் சுத்தம் செய ்து வரவும்- இந்த நாளில் கோவில்களுக்கு பெருக்க தென்னந்துடப்பங்கள் தானமாய் தர லக்ஷ்மி தேவி மனம் குளிர்ந்து அருள் புரிவார். வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து இன்னாளில் பூஜிக்க பொருள் வரவு மேம்படும். இந்நாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும். மீன்களுக்கு இந்நாளில் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, கோதுமை உருண்டைகள் போட்டு...